GENERAL KNOWLEDGE MCQS
பிட்டி தியாகராயர் 28.04.2025-ல் நீதிகட்சியின் தலைவரான சர் பிட்டி.தியாகராயரின் 100வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் (ஏப்ரல் 27, 1852 - ஏப்ரல் 28, 1925) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர், தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916-இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வர்களாக இருந்தனர். 1925-இல் இவர் இறந்த போது சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட இடத்திற்கு இவரது நினைவாக தியாகராய நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தியாகராய நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது. பிரித்தானிய அரசு இவருக்கு 1909 சனவரி ஒன்றாம் நாள் ராவ் பகதூர் பட்டம் வழங்கியது. 1919 சனவரி ஒன்றாம் நாள் திவான் பகதூர் என்னும் பட்டம் பெற்றார்